vivo Y04 Review In Tamil

vivo Y04 Review In Tamil 



Design & Build

vivo Y04 இந்தியாவில் 2025 பிப்ரவரியில் வெளியான ஒரு entry-level smartphone. இந்த மொபைல் கையை கம்பீரமாக பிடிக்கும் மாதிரி 167.3mm உயரம், 77mm அகலம் மற்றும் 8.2mm தடிமன் கொண்டிருக்கு. 199 கிராம் வெயிட்டா இருக்கு, அதனால் கைல பிடிக்க சுத்த comfortable-ஆ இருக்கும். இதுல glass front, plastic back இருக்கு. ஆனாலும் இதோட finishing நல்லா இருக்கு, premium feel கொடுக்கும்.

இது இரண்டு நிறங்களில் கிடைக்குது – Titanium Gold மற்றும் Dark Green. Side-mounted fingerprint sensor இருக்கும், அதனால பாஸ்வேர்டு போடாம ஒரே touch-ல unlock பண்ணிக்கலாம். கூடுதலா IP64 splash-resistant சான்றிதழும் இருக்கு, அதாவது சிறு தூசி, தண்ணீர் தெளிப்பு போன்றவைக்கு பாதுகாப்பு.

Display 

இந்த மொபைல்ல 6.74-இஞ்ச் IPS LCD திரை இருக்கு. HD+ தீர்மானம் (720x1600 pixels) தான், ஆனா அதனோட 90Hz refresh rate பெரிய Highlight. இவ்வளவு குறைவான விலையில் 90Hz Display கொடுக்குறது ரொம்பவே சிறப்பு. ஸ்க்ரோல் பண்ணுறப்போ, UI navigate பண்ணுறப்போ, மிக மென்மையா இருக்கும்.

திரை அளவு பெரியதால வீடியோ பார்க்கும் அனுபவம் நல்லா இருக்கும். ஆனா Full HD display இல்லாததால, text/படங்கள் கூர்மையா தெரியாது. எப்போதும் வீடியோ பாக்குறவங்கக்கு இது பெரிய minus இல்ல, ஆனா sharpness lovers-க்கு drawback தான்.

Performance 

vivo Y04, Unisoc T7225 என்ற entry-level சிப்செட்டை பயன்படுத்துது. இதுல Octa-core processor இருக்கு – 2x2.0GHz Cortex-A75 மற்றும் 6x1.8GHz Cortex-A55. கேமிங் அல்லது multitasking மாதிரி வைரம் வேலைக்கு இது சரியில்லை. ஆனா தினசரி வேலைகளுக்கு – WhatsApp, Facebook, YouTube, நாம use பண்ணுற basic apps – போதுமானது.

இதுல 4GB RAM இருக்கு, அதுடன் விர்ச்சுவல் RAM option கூட இருக்கு (அதாவது internal storage வைச்சு temporary RAM போல யூஸ் பண்ணிக்கலாம்). 64GB/128GB eMMC storage இருக்கு. மேலா microSD card வைச்சு 1TB வரை மெமரி கூட்டிக்கலாம். ஒட்டுமொத்தமாக, இந்த segment-க்கு சரியான performance தான் கொடுக்குது.



Battery 

இந்த மொபைல்ல இருக்கும் 5,500mAh battery தான் இதோட Hero. ஒரே charge-ல ஒரு நாள் முழுக்க போட்டா battery தேறிடும். சில light users கிட்டோட இரண்டு நாளும் போயிருக்கும்.

இதுக்கு கூடுதலா 15W fast charging support இருக்கு. Full charge ஆக 2 மணி நேரம் எடுத்துக்கலாம். இந்த விலை பிரிக்கையில் battery-வச்சு vivo நல்லதா பண்றாங்க. வேலைக்கு வெளியே போறவங்க, அதிக நேரம் phone யூஸ் பண்றவங்கக்கு இது ரொம்பவே plus point.

Camera 

விவோ Y04ல Dual Rear Camera setup இருக்கு – 13MP main camera + 0.08MP depth sensor. இவை decent daylight photos எடுக்கும். வெளிச்சமா இருக்கும் இடத்துல, normal social media photosக்கே நல்லா தான் இருக்கும். ஆனா night/low light-ல photos blur-ஆ, noisy-ஆ இருக்கும்.

முன்பக்க கேமரா 5MP தான். Zoom call, WhatsApp video call மாதிரி basic விஷயங்களுக்கு போதுமானதா இருக்கும். Selfie quality-க்கு ok தான். Video record பண்ணலனா, maximum 1080p@30fps தான். இதுல OIS, Ultra-wide, Macro lens எதுவும் இல்ல.

Previous Post Next Post

نموذج الاتصال