Vivo Y29s Review In Tamil

Vivo Y29s Review In Tamil 




Design & Build

இது 8.2 மில்லிமீட்டர் தடிப்புடன் சுமார் 199 கிராம் எடையோட வருகிறது. பின்பக்கம் பிளாஸ்டிக் பில்டா இருக்கும், ஆனா கண்ணாடி முன்பக்கம் கொஞ்சம் premium மாதிரி காட்டும். IP64 சான்றிதழ் இருக்கு – இதன் மூலம் தூசியும், தண்ணீர் தெளிவும் சாதாரண அளவுக்கு தடுக்க முடியும். SGS drop test-லும் military-grade certifications-லும் பாஸ் ஆனது. டார்க் கிரீன் மற்றும் டைட்டானியம் கோல்டு மாதிரியான கலர்ஸ் நல்லா இருக்கு.

Display 

Vivo Y29s-ல 6.74-இஞ்ச் அளவுள்ள IPS LCD திரை இருக்கு. ஆனால் ரெஸல்யூஷன் HD+ தான் (720x1600 pixels), அதனால் பெரிதா screen பார்த்தால கொஞ்சம் clarity கம்மியா தெரியும். ஆனா 90Hz refresh rate இருக்கும் காரணத்தால scrolling, apps open பண்ணுறது எல்லாம் நன்றாக ஸ்மூத் ஆக இருக்கும். TÜV Low Blue Light சான்றிதழும் இருக்கு, இதால் கண்களுக்கு பாதிப்பு இல்லாம இருக்க உதவுகிறது.

Performance 

இந்த போன்ல MediaTek Dimensity 6300 (6nm) processor இருக்கு. இதோட Mali-G57 graphics card moderate-level gaming & multitasking க்கு போதுமானது. 6GB/8GB RAM வேரியண்ட்கள், மற்றும் dedicated microSD card ஸ்லாட் இருப்பது பெரிய பிளஸ். dual SIM + memory card ஒரே நேரத்தில் வைக்க முடியும். 5G, Wi-Fi 5, Bluetooth 5.4, USB-C, OTG எல்லாம் basic connectivity-க்கு perfect தான். Heavy gaming-க்கு பெரிய எதிர்பார்ப்போட வாங்க கூடாது.

Camera 

பின்புறத்தில் 50MP பிரதான கேமரா இருக்கு. கூடவே ஒரு 0.08MP bokeh lens இருக்கு – இது photos-க்கு blur effect கொடுக்க உதவிசெய்யும். முன்னிலையில் 5MP செல்ஃபி கேமரா இருக்கு. day light ல photos நல்ல sharp-ஆ வரும். ஆனா இரவில், அல்லது வெளிச்சம் இல்லாத இடத்தில், photos clarity சுமாராக இருக்கும். AI Photo Enhance, Face Detection, AI Eraser மாதிரி smart features இருக்கு – casual use-க்கு நல்லா இருக்கு.



Battery 

இந்த போன்ல 5500mAh BlueVolt battery இருக்கு. இது ஒரு நாளைக்கு மேல battery backup தரும். Vivo சொல்றதுபோல, YouTube continuous-ஆ 21 மணி நேரம், music-ஐ 24 மணி நேரம் play பண்ண முடியும். 15W charging தான், அதனால் full charge ஆக கொஞ்சம் நேரம் ஆகும். ஆனா battery-யின் health 5 வருஷம் வரை 80% மேல் தாங்கும் மாதிரி optimize பண்ணிருக்காங்க. இது long-term use-க்கு best.

Software 

இது Android 15-ஐ ரன்னிங் பண்ணும், அதோட Vivo-வோட Funtouch OS 15 skin இருக்கு. இது நிறைய customizations, themes, AI-based tools, ultra-bright flashlight, dark mode, battery saver எல்லாம் கொடுக்குது. சில பேருக்கு Vivo-வோட UI அதிகம் color-ful-ஆ இருக்கும் மாதிரி பாகுறது பிடிக்காம இருக்கலாம், ஆனா latest version smooth-ஆ தான் இருக்கு.

Previous Post Next Post

نموذج الاتصال