Vivo Pad SE Review In Tamil

Vivo Pad SE Review In Tamil 




Design & Display

Vivo Pad SE-இல் 12.3 அங்குல IPS LCD டிஸ்பிளே உள்ளது. Resolution 2464 × 1600 pixels. சில மாதிரிகளில் 90Hz refresh rate, சில மாதிரிகளில் 120Hz refresh rate கொடுக்கப்பட்டுள்ளது. Screen-க்கு anti-glare coating இருப்பதால் நீண்ட நேரம் படித்தாலும் கண்களுக்கு சோர்வு குறையும். இது full sRGB color support உடன் வருகிறது. Brightness 600 nits வரை இருக்கும். iPad மாதிரி high-end tablets அளவுக்கு இல்லை என்றாலும், normal use க்கு போதுமானது. Build மிகவும் slim (6.8mm) மற்றும் எடை 559g முதல் 678g வரை மாறுபடுகிறது.

Performance 

இந்த டேப்லெட்டில் Snapdragon 4 Gen 2 processor (8-core) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது WhatsApp, YouTube, Google Meet, Netflix மாதிரி apps எல்லாம் சும்மா ஓட வைக்கும். ஆனாலும் heavy gaming அல்லது pro-level video editing-க்கு சற்று மெதுவாக இருக்கும். RAM 6GB/8GB, storage 128GB/256GB வரை கிடைக்கிறது. Software பகுதியில், இது Android 15-இன் மேல் Vivo-வின் OriginOS 5 HD UI-யுடன் வருகிறது.

Battery 

Battery capacity பற்றிய தகவல் வித்தியாசமாக இருக்கிறது. சில reports-ல் 8500 mAh என்றும், சில reports-ல் 11500 mAh என்றும் கூறப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும், ஒரு நாள் முழுக்க பயன்படுத்த போதுமான power இருக்கும். ஆனால் சார்ஜிங் வேகம் மிகவும் slow. 15W charging மட்டுமே support செய்கிறது. அதனால் 0% to 100% charge ஆக 3 மணி நேரத்துக்கும் மேலாக எடுக்கலாம்.

Camera 

கேமரா பகுதியில் அதிக வசதிகள் இல்லை. முன்புறமும் (front) பின்புறமும் (rear) 5MP cameras தான். வீடியோ பதிவு 1080p @ 30fps வரை support செய்கிறது. Online classes அல்லது video calls-க்கு போதுமானது, ஆனாலும் photography quality சாதாரணமாகத்தான் இருக்கும். Audio பகுதியில், 4 speakers கொடுக்கப்பட்டுள்ளதால் OTT streaming, YouTube, movies பார்க்கும் போது நல்ல stereo sound கிடைக்கும்.



Connective 

Vivo Pad SE-இல் USB-C port (OTG support), Wi-Fi, Bluetooth 4.2, GPS, NFC support உள்ளது. ஆனால் இதில் SIM card slot இல்லை, அதனால் 4G/5G support கிடையாது. கூடவே, headphone jack மற்றும் fingerprint sensor கூட கிடையாது.

Educational Features

Vivo, இந்த tablet-ஐ students க்கேற்ப உருவாக்கியுள்ளது. அதில் ஒரு scanner app கொடுக்கப்பட்டுள்ளது, அதனால் பாடப்புத்தகங்களை ஸ்கேன் செய்து PDF ஆக save செய்யலாம். மேலும், ஒரு AI scheduler கொடுக்கப்பட்டுள்ளது, அதனால் படிப்பு நேரத்தை neatly organize பண்ணிக்கொள்ளலாம். ஆனால் இந்த features இந்திய version-ல வரும் என்கிறது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Previous Post Next Post

نموذج الاتصال