vivo IQOO Pad5 Review In Tamil

vivo IQOO Pad5 Review In Tamil 




Design & Build

iQOO Pad 5-ஐ கையில் எடுத்த உடனே ஒரு பிரீமியம் பீலிங் வரும். அலுமினியம் பின்புறம், அலுமினியம் பிரேம், கண்ணாடி முன்புறம் – எல்லாமே கம்பீரமா கட்டியிருக்காங்க. எடை சுமார் 590 கிராம் தான், டேப்லெட் category-க்குப் பார்த்தா மிகுந்து தெரியாது. 6.6 மில்லிமீட்டர் தடிமன்தான், கம்பீரமா ஸ்லிம். நிறங்கள் மூணு தான் – சாம்பல், பச்சை, வெள்ளி. கூடவே ஸ்டைலஸ் சப்போர்ட் இருக்குது, அது தனியா வாங்கணும். ஆனா படிக்க, ட்ரா பண்ண, குறிப்பெடுக்க மிகவும் யூஸ்ஃபுல்.

Display 

iQOO Pad 5-இன் மிகப்பெரிய பலம் தான் 12.1-இஞ்ச் IPS LCD டிஸ்ப்ளே. 2.8K ரெசல்யூஷன் (1968 × 2800) கொடுத்திருப்பாங்க. அதனால மூவி, கேமிங், வாசிப்பது எல்லாமே உயிரோடத் தெரியும். 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கேமிங்கில் பக்கா ஸ்மூத் அனுபவம் தரும். HDR10 சப்போர்ட் இருப்பதால கலர்ஸ் பளிச்சிடும். 900 நிட்ஸ் ப்ரைட்னஸ் என்பதால் வெளிச்சத்திலும் க்ளியரா காணலாம். மூவீஸ், OTT சீரிஸ் பார்ப்பவர்களுக்கு செம்ம பிளஸ்.

Performance 

இந்த டேப்லெட்டின் பவர் பற்றி சொல்லவே தேவையில்லை. MediaTek Dimensity 9300+ (4nm) சிப் தான் இதுக்குள் இருக்கு. ஹை எண்ட் ஸ்மார்ட்போன்களில் வரும் சிப். அதனால கேமிங்கோ, மல்டிடாஸ்கிஙோ எதுவாக இருந்தாலும் லாக் இல்லாமல் ஓடும். 8GB, 12GB, 16GB RAM ஆப்ஷன்ஸ் இருக்கு. ஸ்டோரேஜ் 128GB, 256GB, 512GB வரை கிடைக்கும். 128GB-க்கு UFS 3.1 ஸ்டோரேஜ், அதுக்கு மேல் UFS 4.1 – ரொம்பவே வேகமான ரீட்/ரைட் வேகம். AnTuTu ஸ்கோர் 2.25 மில்லியன் என்கிறாங்க. அதே நேரம் குளிர வைக்க ஹீட் டிஸிபேஷன் பிளேட் இருக்குது.

Software 

இந்த டேப்லெட் Android 15-ஐ அடிப்படையா கொண்ட OriginOS 5 (HD)-ல ஓடுது. டேப்லெட்டுக்கான ஸ்பெஷல் அம்சங்கள் நிறைய இருக்கு. PC second screen ஆக உபயோகிக்கலாம். அதாவது லேப்டாப்போடு சேர்த்து கூடுதல் ஸ்க்ரீன் மாதிரி பண்ணிக்கலாம். Remote Desktop Control இருக்கு, அதனால வேற சிஸ்டத்தை டேப்லெட்டிலேயே கன்ட்ரோல் பண்ணலாம். vivo, iQOO போன்களோட instant-ஆ கானெக்ட் ஆகும். ஆன்லைன் மீட்டிங்கும், வகுப்புகளும் எடுக்க AI noise cancellation, voice transcription மாதிரி அம்சங்களும் கொடுத்திருக்காங்க.

Audio 

iQOO Pad 5-க்கு 6 ஸ்பீக்கர் ஸ்டீரியோ சிஸ்டம் இருக்கு. இது தான் இன்னொரு ஹைலைட். மூவி பார்ப்பது, கேம்ஸ் ஆடுவது, மியூசிக் கேட்பது – எதுவாக இருந்தாலும், ஒலியின் குவாலிட்டி ரொம்ப இனிமை. ஹெட்போன் போட்டுக்காமலே சினிமா அனுபவம் வரும்.

Battery 

10,000 mAh பேட்டரி இருப்பதால ஒரு நாள் முழுக்க ஹெவி யூஸேஜ்-க்கும் போதுமானது. 44W பாஸ்ட் சார்ஜிங் இருக்கு. அரை மணி நேரத்திலேயே நல்ல அளவுக்கு சார்ஜ் ஆகிடும். அதோட 5W ரிவர்ஸ் சார்ஜிங் உண்டு, அதனால போனோ, இயர்போட்ஸோ சார்ஜ் பண்ணிக்கலாம்.



Connectivity

கனெக்டிவிட்டி பகுதியில் லேட்டஸ்ட் டெக்னாலஜீஸ் கொடுத்திருக்காங்க. Wi-Fi 7, Bluetooth 5.4, USB-C 3.2 – எல்லாம் உண்டு. ஆனா சில குறைகளும் இருக்கு. SIM slot இல்லை, GPS இல்லை, NFC இல்லை, ஹெட்போன் ஜாக் இல்லை, SD கார்ட் ஸ்லாட் இல்லை. அதனால சற்று லிமிடேஷன்.

Camera 

கேமரா சைடு பேச வேண்டியது நிறைய இல்லை. பின் பக்கத்தில் 8MP கேமரா மட்டுமே இருக்கு. முன்புறம் 5MP. இரண்டிலும் 1080p வீடியோ தான் சப்போர்ட். வீடியோ கால், ஆன்லைன் மீட்டிங்கிற்கு சரியாக இருக்கும். ஆனா புகைப்பட ஆர்வலர்களுக்கு இல்லை.

Previous Post Next Post

نموذج الاتصال